ஒரு நாள் தனிமையில் இருந்த பொழுது ஓடிய எண்ணங்களின் ஒரு சிறு தொகுப்பு
பள்ளி வாசலில் நிர்க்கும் பஞ்சு மிட்டாய் வண்டி
விளையாட்டு வேளை
எல்லா வண்ணங்களிலும் சேகரித்த இறகுகள்
விடுமுறை நாட்கள்
பிறந்த நாளன்று கிடைக்கும் மிட்டாய் இவற்றை எல்லாம் ரசித்துக்கொண்டு
எந்த கவலையும் இன்றி
நாளை பற்றிய சிந்தனை இன்றி கள்ளம் கபடம் ஏதும் இன்றி
நாம் நாமாக
நிம்மதியாக இருந்த நாட்களை நமக்கும் அறியாமல் தொலைத்தோம் எப்பொழுது இந்த இயந்திர உலகத்திலே நம்மை மறந்தோம்
எதர்க்காக ஓடுகிறோம், எங்கு போய் சேர்கிறோம் என்று அறியாமல் இந்த ஒட்ட பந்தயத்தில் இறங்கி விட்டோம்
நம் தனி அடையாளத்தை தொலைத்து
ஆட்டு மந்தையை போல் ஒருவரை ஒருவர் பின் தள்ள பார்க்கிறோமே அன்றி
தனித்தன்மையுடன் ஏதும் செய்ய இயலாமல் போனோம்
இதை பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அம்மாவின் குரல் கேட்டது " கோவில் போகலாம் வா" என்று.
கோவிலில் சென்று நான் வேண்டிக்கொண்டது
'பொது தேர்வில் நான் எல்லோரையும் விட நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்று '
Saturday, March 15, 2008
Friday, March 7, 2008
மே 16, 2022
அவள் கண்களில் அத்தனை தெளிவு அத்தனை மகிழ்ச்சி. அவள் வாழ்க்கையின் அர்த்தம் அறிந்துவிட்டதாக உணர்ந்தாள். அழகாக நேர்த்தியுடன் அவள் அணிந்திருந்த நீலப்புடவை அவளது மனத்தின் தெளிவை பிரதிபலித்தது. அவள் அந்த இடத்தில் கால் வைத்ததும் உடல் சிலிர்த்தது கடைசியாக இப்படி மகிழ்ந்து அவளுக்கு நினைவு இல்லை.
ஏன் இந்த மாற்றம்?
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத பெற்றோர்கள். எப்பொழுதும் சண்டை சச்சரவு.சில சமையம் அப்பா இரண்டு மூன்று நாட்கள் வீட்டுக்கே வரமாட்டார். அப்பாவை பற்றி புலம்புவதே அம்மாவின் வேலை. இதார்க்கெல்லாம் இடையில் அவளால் முடிக்க முடிந்தது 10ஆம் வகுப்பு வரை மட்டுமே. பெற்றோர்களின் சண்டையில் மனம் சோர்ந்து போகும் போதெல்லாம் கடல் தான் அவளுக்கு மருந்து. சில சமையம் அவள் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தருவாள். பணம் பெரிதாக இல்லை என்றாலும் அந்த குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில் ஒரு மன நிறைவு இருந்தது.அன்று காலை அவள் தோழியின் திருமணத்திர்க்கு புறப்பட்டு கொண்டிருந்தாள், அன்றும் அப்பா அம்மாவிற்குள் ஏதோ வாக்கு வாதம் நடந்து கொண்டிருந்தது. எப்பொழுது அதை பெரிதாக பொருட்படுத்தாத அவளுக்குஅன்று மட்டும் ஏதோ ஒரு மாதிரியாக உணர்ந்தாள். சண்டை தொடர்ந்தது அதை பார்க்க முடியாமல் கனத்த மனதுடன் புறப்பட்டு சென்றாள். திருமணம் நன்றாக முடிந்தது. மாநகர பேருந்து நிறுத்ததிலிருந்து வீட்டிற்க்கு நடந்து கொண்டிருந்த அவளுக்கு திருமணத்தை பற்றி எண்ணங்கள் ஓடின. அந்த நினைப்பில் ஒரு சிறு புன்னாகாயுடன் வீட்டிற்க்கு வந்தாள்.ஆனாள் என்றைக்கும் இல்லாமல் வீட்டில் எல்லோரும் கூடியிருந்தனர். உள்ளே வந்த அவளுக்கு அதிர்ச்சி.அவள் அம்மா தான் தலையில் கையை வைத்து அமர்ந்திருந்தாள் அருகில் அப்பா. இப்பொழுது இருவராலும் சண்டை போட முடியாது.
அப்பாவின் பிரிவிர்க்கு பிறகு குடும்பத்தை சுமக்கும் பாரம் அவள் தலையில் விழுந்தது. காலை 6 மணி முதல் 8 மணி வரை அது போல் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பள்ளி குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்தாள். அவளது வீடு மிகவும் சிறியது என்பதால் 10நிமிட நடை தூரத்திலுள்ள தேவாலயத்தில் பாடம் சொல்லி தந்தாள்

ஃபெப்ருவரீ 9, 2004
எப்பொழுதும் காலை தனக்கு முன்னால் எழுந்து காப்பி கொடுக்கும் அம்மா அன்று நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். அம்மாவை எழுப்ப மனமில்லாமல் தான் வேலையை பார்க்க புறப்பட்டாள். பாடம் கற்று கொண்டிருக்கும் போது திடீரென அவல குரல்கள் கேட்டன.. அவள் கண்ணை அவளால் நம்ப முடியவில்லை ஆளை விழுங்கும் அலை வந்து மக்களை விழுங்குவதை கண்டால். அருகில் உள்ள குழந்தைகளை ஆரவணைத்து கொண்டாள்.அன்று இரவு தான் தெரிந்தது அந்த ராட்சத அழைக்கு பெயர் ட்ஸுநாமி. அந்த அலை அவளை மட்டும் ஆனதாயாக்கவில்லை அவளிடம் பாடம் படித்த இரண்டு பெண் குழந்தைகளும் தான்.
மே 16,2022
அவளின் மகிழ்வுக்கும் சந்தோஷத்திர்க்கும் காரணம் அவள் நுழைந்தது அவளது வளர்ப்பு மகளின் மருத்துவ பட்டமளிப்பு விழாவிர்க்கு. பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இரு பெண் குழந்தைகளுடன் புதிதாக தொடங்கிய அவள் வாழ்க்கையில் அவள் செய்யாதது திருமணம்.அர்த்தமற்ற வாழ்வீர்க்கும் அர்த்தம் தருவது நமது செயல்களே!

Subscribe to:
Comments (Atom)