Saturday, March 15, 2008

எண்ணங்களும் செயல்களும்!!!!

ஒரு நாள் தனிமையில் இருந்த பொழுது ஓடிய எண்ணங்களின் ஒரு சிறு தொகுப்பு

பள்ளி வாசலில் நிர்க்கும் பஞ்சு மிட்டாய் வண்டி
விளையாட்டு வேளை
எல்லா வண்ணங்களிலும் சேகரித்த இறகுகள்
விடுமுறை நாட்கள்
பிறந்த நாளன்று கிடைக்கும் மிட்டாய் இவற்றை எல்லாம் ரசித்துக்கொண்டு
எந்த கவலையும் இன்றி
நாளை பற்றிய சிந்தனை இன்றி கள்ளம் கபடம் ஏதும் இன்றி
நாம் நாமாக
நிம்மதியாக இருந்த நாட்களை நமக்கும் அறியாமல் தொலைத்தோம் எப்பொழுது இந்த இயந்திர உலகத்திலே நம்மை மறந்தோம்
எதர்க்காக ஓடுகிறோம், எங்கு போய் சேர்கிறோம் என்று அறியாமல் இந்த ஒட்ட பந்தயத்தில் இறங்கி விட்டோம்
நம் தனி அடையாளத்தை தொலைத்து
ஆட்டு மந்தையை போல் ஒருவரை ஒருவர் பின் தள்ள பார்க்கிறோமே அன்றி
தனித்தன்மையுடன் ஏதும் செய்ய இயலாமல் போனோம்


இதை பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அம்மாவின் குரல் கேட்டது " கோவில் போகலாம் வா" என்று.
கோவிலில் சென்று நான் வேண்டிக்கொண்டது
'பொது தேர்வில் நான் எல்லோரையும் விட நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்று '

No comments: